விக்னேஷ் சிவன் தயாரிப்பில், நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘நெற்றிக்கண்’.
இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக ஆரம்பமாகி இடையில் நிறுத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் தகவல் வெளியானது.
இப்படத்தை இயக்கி வரும் மிலிந்த் ராவ் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய பிறந்தநாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அப்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விக்னேஷ் சிவன், அவருடைய சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார். அடுத்த படமாக அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை