சூர்யா 43 – தமிழில் மீண்டும் நஸ்ரியா

2013ல் வெளிவந்த ‘நேரம்’ படம் மூலம் தமிழில் அறிமகமானவர் மலையாள நடிகை நஸ்ரியா. அதன்பின் ‘ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்தார்.

நான்கே படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக இருந்தார். அதன்பின் மலையாள நடிகர் பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கினார். 

இருப்பினும் மீண்டும் மலையாளம், மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தார். தமிழில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா தற்போது சூர்யாவின் 43வது படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, துல்கர் சல்மான் நடிக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா தான் கதாநாயகி. “இது மிகவும் சிறப்பானது, காத்திருக்க முடியவில்லை,” என இப்படத்தில் நடிப்பது குறித்து குறிப்பிட்டுள்ளார் நஸ்ரியா.

Read Previous

லியோ – 7 நாளில் 461 கோடி வசூல்

Read Next

லியோ வெளியான தமிழ்நாடு தியேட்டர்கள் விவரம்

Most Popular