நவரசா – ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியீடு

தமிழில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், ஒன்பது விதமான ஆந்தாலஜி படமான ‘நவரசா’ படத்தின் டீஸரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அதை வெளியிடும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனராண மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இதைத் தயாரித்துள்ளார்கள். 

மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களான, கோபம், கருணை, தைரியம், அருவெறுப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது கதைகள் இந்த ‘நவரசா’வில் இடம் பெற்றுள்ளன.

ஆகஸ்ட் 6ம் தேதியன்று 190 நாடுகளில் இது நெட்பிளிக்ஸ் தளம் மூலம் வெளியாகிறது.

கொரானோ நோய் தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இப்படத்தில் எந்த ஊதியமும் இல்லாமல், தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் நட்சத்திரங்கள் பணிபுரிந்துள்ளார்கள்.

அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், ப்ரியதர்ஷன், ரதீந்திரன் பிரசாத், சர்ஜூன் மற்றும் வசந்த் சாய் ஆகிய 9 இயக்குனர்கள் தங்களின் மாறுப்பட்ட பார்வையில் மனித உணர்வுகளின் ஒன்பது ரசத்தை படைப்புகளாகத் தந்துள்ளனர்.

இது குறித்து மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா கூறியதாவது,

ஒரு நல்ல விசயத்துக்காக நிதி திரட்டும் பணிகளை நாங்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறோம். ஆனால் இந்த உலக பொது முடக்கம் எங்கள் முகத்தில் அறையும் உண்மையை எடுத்துச் சொல்லியது. நோய் தொற்றால் ஏற்பட்ட இந்த பொது முடக்கத்தினால் திரைத்துறை தான்  மிகப்பெரும் பாதிப்பை பெற்றுள்ளது என்கிற உண்மையை உணர்ந்தோம். 

சக திரை தொழிலாளர்களுக்காக, ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. திரைத்துறை தொழிலாளர்களுக்கு ஆதரவு தரும் வகையில், உதவும் எண்ணத்தில் பிறந்தது தான் ‘நவரசா’ ஆந்தாலஜி படைப்பு.

இந்த ஐடியாவை எங்களது சக, முன்னணி படைப்பாளிகள், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களிடம் எடுத்துச் சொல்லிய போது, அவர்களின் ஆதரவு பிரமிப்பு தருவதாக இருந்தது. அனைவரும் வெகு உற்காசத்துடன் பணிபுரிய சம்மதித்தார்கள். 

இந்த ஒன்பது படங்களும் மிகப் பெரும் முன்னணி ஆளுமை நிறைந்த குழுக்களுடன், மிகக் கடினமான சிக்கலான நோய்தொற்று காலத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால் நோய் தாக்காதவாறு அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப்பட்டு முழு பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, இப்போது படம் நிறைவடைந்துள்ளது. 

தங்கள் சக தோழர்களுக்காக திரை ஆளுமைகள் மிகப்பெரும் அர்ப்பணிப்புடன், ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் அற்புதமான படைப்பை உலகம் முழுதும் 190 நாடுகளில் கண்டுகளிக்கலாம்.

தங்கள் திரைத்துறை நண்பர்களுக்கு, தொழிலாளர்களுக்கு ஆதரவுக் கரம் தரும் பொருட்டு, முன்னணி கலைஞர்கள் எந்த ஊதியமும் பெறாமல், முழு அர்ப்பணிப்பைத் தந்து, உருவாக்கியிருக்கும் இந்த உன்னத படைப்பினை உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமை கொள்கிறோம். 

நம் திரைத்துறை கலைஞர்கள் மற்றும்  வல்லுநர்களின் திறமையை எடுத்துக் காட்டும், இந்த அற்புத ஆந்தாலஜி திரைப்படம் 12,000 திரைத்துறை தொழிலாளர்களுக்கு இந்த பொதுமுடக்கத்தில் ஆதரவைத் தந்துள்ளது.

திரைத்துறை முழுவதிலிருந்தும் கிடைத்து வரும் ஆதரவுகள் Bhoomika Trust மூலம் ஒருங்கிணைத்து வழங்கப்பட்டு வருகிறது. உணர்ச்சிபூர்வமான இந்த திரைப்பயணத்தில் எங்களுடன் இணைந்ததற்காக Netflix நிறுவனத்திற்கு நன்றி.

பரத்பாலா  எண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட, மனித உணர்வுகளின் ஒன்பது ரசங்களை வித்தியாசமான பார்வையில், ஒன்பது கதைகளாக சொல்லும், இப்படத்தின் டீஸர், இன்று ரசிகர்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது,” என்றார்கள்.

நவரசா – புகைப்படங்களைப் பார்க்க… இங்கே க்ளிக் செய்யவும்

படத்தின் விபரங்கள் :

தயாரிப்பாளர்கள்  – மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன்

1. தலைப்பு  – எதிரி (கருணை)
   இயக்குநர் – பிஜாய் நம்பியார்
   நடிகர்கள் – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

2. தலைப்பு  –  சம்மர் ஆஃப்  92 (நகைச்சுவை)
   இயக்குநர் – ப்ரியதர்ஷன்
   நடிகர்கள் – யோகி பாபு,  ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு

3. தலைப்பு  – புராஜக்ட் அக்னி  (ஆச்சர்யம்)
  இயக்குநர் – கார்த்திக் நரேன்
   நடிகர்கள் – அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

4. தலைப்பு  – பாயாசம் ( அருவெறுப்பு )
   இயக்குநர் – வசந்த் S  சாய்
   நடிகர்கள் – டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

5. தலைப்பு  – அமைதி (அமைதி)
   இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்
   நடிகர்கள் – சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

6. தலைப்பு  – ரௌத்திரம் (கோபம்)
   இயக்குநர் – அர்விந்த் சுவாமி
   நடிகர்கள் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

7. தலைப்பு  – இண்மை  (பயம்)
   இயக்குநர் – ரதீந்திரன் R பிரசாத்
   நடிகர்கள் – சித்தார்த், பார்வதி  திருவோர்து

8. தலைப்பு  – துணிந்த பின் (தைரியம்)
   இயக்குநர் – சர்ஜூன்
   நடிகர்கள் – அதர்வா, அஞ்சலி, கிஷோர்

9. தலைப்பு  – கிடார் கம்பியின் மேலே நின்று  (காதல்)
   இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்
   நடிகர்கள் – சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

Read Previous

ரீமேக் ஆகும் நகைச்சுவைப் படம் ‘காசேதான் கடவுளடா’

Read Next

ஒரே நேரத்தில் பல பட அறிவிப்புகளை வெளியிட்ட தயாரிப்பாளர்

Most Popular