தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026–2029 நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தெரிவுசெய்யும் தேர்தல் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் அறிமுக கூட்டம் டிசம்பர் 22, 2025 அன்று சென்னை ஹோட்டல் ராதா பார்க் இன்னில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலைபுலி எஸ்.தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், வி.சி.குகநாதன், இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியின் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கலைபுலி எஸ்.தாணு மற்றும் ஆர்.கே.செல்வமணி பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த அணியில்,
– துணைத் தலைவர்கள் பதவிக்கு ஆர்.கே. சுரேஷ் மற்றும் எஸ். கமலக்கண்ணன்,
– செயலாளர்கள் பதவிக்கு ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் கமீலா நாசர்,
– பொருளாளர் பதவிக்கு என். சுபாஷ் சந்திரபோஸ்,
– இணைச் செயலாளர் பதவிக்கு சுஜாதா விஜயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மேலும், செயற்குழு உறுப்பினர்களாக மூத்த தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி, சித்ரா லட்சுமணன், எச்.முரளி, எம்.கபார், ஆர்.மாதேஷ் உள்ளிட்டோர் மற்றும் சாலை சகாதேவன், பைஜா டாம், எஸ்.ஜோதி, வி.பழனிவேல், கே.செந்தாமரை கண்ணன், நீல்கிரிஸ் ஏ.முருகன், ஜி.எம்.டேவிட்ராஜ், டி.என்.தாய்சரவணன், கே.முருகன், .வி.ஞானவேல், பிரவின்காந்த், வி.என்.ரஞ்சித் குமார், எஸ்.ஜெயசீலன், ராஜா @ பக்ருதீன் அலி அகமத், எம்.தனசண்முகமணி, பி.ஜி.பாலாஜி, இசக்கிராஜா, பி.மகேந்திரன், எஸ்.பிரப்தீஸ் சாம்ஸ், ஏ.ஏழுமலை, எஸ்.என்.ராஜராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை கலைபுலி எஸ்.தாணு அவர்கள் அறிமுகப்படுத்தி வாழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களான இயக்குநர்கள் லிங்குசாமி, சரண் உள்ளிட்டோர் வேட்பாளர்களை பாராட்டி உரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.எம். தமிழ்குமரன் மற்றும் ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் அணி வெற்றி பெற்றால் சங்க உறுப்பினர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முன்னேற்றத் திட்டங்களை அறிவித்தனர்.
நிர்வாக தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற இக் கூட்டத்தில் சங்கத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்து கொண்டு “தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணிக்கு” பாராட்டுகள் தெரிவித்தனர்.