மிஸ்டர் பாரத் – வெளியீடு தள்ளி வைப்பு

லோகேஷ் கனகராஜ் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன், நிதி பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை சிரிக்கவும், மகிழ்விக்கவும் கூடிய காமெடி எண்டர்டெயின்மெண்ட் படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது.

இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே தேதியில் பல எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் வெளியான நிலையில், அனைத்து படங்களுக்கும் போதிய திரையரங்குகளும் ரசிகர்களின் கவனமும் கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்துள்ளது.

படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

Read Next

இயக்கம், நடிப்பு – ஜேசன் சஞ்சய் பதில்