மாஸ்டர், கோப்ரா படங்களின் அதிகாரப்பூர்வ அப்டேட்

தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ   படங்களின் அவர்களது அப்டேட்களை தெரிவித்துள்ளனர்.

 விஜய், விஜய்சேதுபதி  இணைந்து நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. 

 விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் ஷுட்டிங்  90 நாட்கள் முடிந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 25% மட்டுமே நடக்க வேண்டும்.

விஜய்சேதுபதி நடிக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஷுட்டிங் 35 நாட்கள் முடிந்துள்ளது.

விஜய்சேதுபதி, நயன்தாரா  சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்  'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் ஆக்ஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது.

விஜய் சேதுபதி, திரிஷா நடித்த '96' திரைப்படத்தை விநியோகித்த நிறுவனம்  7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

அமேசானில் வந்தது ஆட்டோகிராப்

Read Next

பேஸ்புக் நேரடி ஒளிபரப்பில். ஜீ டிவி ‘சரிகமப’ 25வது வருடக் கொண்டாட்டம்

Most Popular