7 நாட்களில் ஓடிடி வெளியீடு: திரையுலகினர் அதிர்ச்சி

படம் வெளியான 7 நாளில் ‘கிருஷ்ணம்மா’ திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட்டதால் திரையுலகினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

வி.வி.கோபாலா கிருஷ்ணா இயக்கத்தில் சத்யதேவ் நாயகனாக நடித்துள்ள படம் ‘கிருஷ்ணம்மா’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தினை முன்னணி இயக்குநர் கொரட்டலா சிவா வழங்கினார். மேலும், இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் ‘கிருஷ்ணம்மா’ வெளியானது. மே 10-ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தின் வியாபாரத்தில் போட்ட முதலீடு கிடைத்துவிட்டதாக படக்குழு விளம்பரப்படுத்தியது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மே 17-ம் தேதி இரவு ‘கிருஷ்ணம்மா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிவிட்டது. இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பனையும் படக்குழு வெளியிடவில்லை. ஒட்டுமொத்த திரையுலகினருக்குமே பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இப்படியே போனால் ஓடிடி எடுக்கும் முடிவுக்கு அனைவருமே கட்டுப்பட வேண்டியதிருக்கும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Read Previous

வெப்பன் சூப்பர் ஹூயூமன் படம் – வசந்த் ரவி

Read Next

‘டிராகன்’ தலைப்புக்கு சிக்கல்