‘டிராகன்’ தலைப்புக்கு சிக்கல்

பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் ‘டிராகன்’ படத்தின் தலைப்புக்கு சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இதனிடையே, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பினை விரைவில் துவங்கவுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் கதைக்கு ‘டிராகன்’ என்ற தலைப்பு சரியாக இருக்கும் என முடிவு செய்துள்ளது.

இதன் தலைப்பு உரிமை பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹரிடம் இருக்கிறது என்று அவரை அணுகியிருக்கிறது. அவரோ எந்தவித மறுப்பு மற்றும் பணமில்லாமல் ‘டிராகன்’ தலைப்பினை கொடுத்துவிட்டார். ஒரே தலைப்பாக இருந்தால் தான் அனைத்து மொழிகளுக்கும் சரியாக இருக்கும் என கருதுகிறது படக்குழு.

ஆனால், தமிழில் ‘டிராகன்’ தலைப்பில் படமொன்று உருவாகி வருகிறது. இரண்டு படக்குழுவினருமே என்ன செய்யப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

Read Previous

7 நாட்களில் ஓடிடி வெளியீடு: திரையுலகினர் அதிர்ச்சி

Read Next

போகுமிடம் வெகுதூரமில்லை படத்தில் எனக்கு அழுத்தமான கதாபாத்திரம் – விமல்

Most Popular