தப்பும் தவறுமாய் ‘கேஜிஎப் 2’ விளம்பரம்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்து கன்னடத்தில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘கேஜிஎப்’.

வித்தியாசமான ஆக்ஷன் படமாக அமைந்த அப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கேஜிஎப் சேப்டர் 2’ படத்தின் டீசரை வரும் ஜனவரி 8ம் தேதியன்று வெளியிட இருக்கிறார்கள்.

அதற்காக ஒரு பத்திரிகை போலவே ‘கேஜிஎப் டைம்ஸ்’ என்ற பெயரில் டிசைன் ஒன்றை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள்.

அதில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட டிசைன் தப்பும் தவறுமாக அமைந்துள்ளது. எழுத்துப் பிழைகள், வார்த்தைப் பிழைகள் என கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் ஒரு டிசைனை செய்து அதை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்கள்.

தெலுங்கு விளம்பரத்திலும் இது போன்றே தவறுகள் இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மொழி தெரியவில்லை என்பது தவறல்ல, அதைத் தெரிந்தவர்களை வைத்து தவறில்லாமல் வெளியிடுவதுதானே சிறப்பு.

பான் இந்தியா வெளியீடாக வர உள்ள ஒரு கன்னடப் படத்தின் விளம்பரத்தை இப்படி மற்ற மொழிகளில் தப்பும் தவறுமாக வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் ?.

படக்குழுவினர் அந்த விளம்பரத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று சரியான வார்த்தைகளுடன் எழுத்துப் பிழை இல்லாமல் வெளியிடுவதே அவர்கள் மற்ற மொழிகளுக்கும் கொடுக்கும் மரியாதை.

Read Previous

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி 

Read Next

கலர்ஸ் தமிழ் – ‘சில்லுனு ஒரு காதல்’ புதிய தொடர்

Most Popular