தனுஷ் நடிக்கும் ‘கர’, கோடை விடுமுறையில் வெளியீடு

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் படம் ‘கர’.  

இந்தப் படத்தை டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணைதயாரிப்பு செய்கிறார்.

90களின் காலகட்டத்தில் ‘கரசாமி’ என்ற இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு மர்மமும், பரபரப்பும் நிறைந்த உணர்ச்சி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.,

‘போர் தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். திரைக்ககதைய அல்ஃபிரட் பிரகாஷ் உடன் இணைந்து அமைத்துள்ளார். தனுஷுடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக நடிக்கிறார், ஜே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிருத்வி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். சென்னை, இராமநாதபுரம், கோவில்பட்டி பகுதிகளில் 80 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்துள்ளது.

படம் பற்றி டாக்டர் ஐசரி கே. கணேஷ் கூறுகையில், “கர’, ஒரு தனித்துவமான திரை அனுபவமாக இருக்கும். முதல் பதிப்பைப் பார்த்ததும் அதன் உணர்வு தாக்கமும் தொழில்நுட்ப சிறப்பும் என்னை நம்ப வைத்தது. நடிகர்களின் நடிப்பு கதைக்கு ஆழம் சேர்க்கிறது, பார்வையாளர்கள் மனதில் நீங்கா தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.

இன்று இப்படத்தின் முதல் பார்வை, அறிமுக வீடியோ உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளனர். 2026 கோடை விடுமுறையில் வெளியாக உள்ள இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.

Read Previous

தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்

Read Next

நாகபந்தம் – பார்வதி கதாபாத்திரத்தில் நபா நடேஷ்

Most Popular