‘கல்கி’ படத்தினை விளம்பரப்படுத்த புதிய விளம்பர யுத்தியை படக்குழு திட்டமிட்டு வருகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சம், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கல்கி’, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கெளரவ தோற்றத்தில் கமல் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
’கல்கி’ படத்தினை மே 30-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே, இந்தப் படத்தினை புதிய வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
தற்போது ‘கல்கி’ படத்திற்காக அனிமேஷன் முறையில் படமொன்றினை தயார் செய்துள்ளது படக்குழு. இதில் ‘கல்கி’ படத்தின் கதை ஆரம்பிக்கும் முன்பு வரை நடந்தது என்ன என்பதினை அனிமேஷன் வடிவில் உருவாக்கியுள்ளனர்.
இந்த அனிமேஷன் படம் முடியும் தருவாயில் இருந்து, ‘கல்கி’ படம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தினை பெரும் விலைக் கொடுத்து ஓடிடி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த அனிமேஷன் படத்துக்கும் பிரபாஸே டப்பிங் செய்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.