ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘கலியுகம்’

ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘கலியுகம்’.

யாரிடம உதவி இயக்குனராகப் பணி புரியாத பிரமோத் சுந்தர் இப்படத்தை இயக்குகிறார். விளம்பரத் துறையில் பணிபுரிந்து சில குறும்படங்களை இயக்கியவர் இவர்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

ஒரு த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது. சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குனராகப் பணி புரிய, பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

காட்சியமைப்புகள், திரைக்கதை, அரங்குகள் என அனைத்துமே பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் என்கிறார் படத்தின் இயக்குநர் பிரமோத் சுந்தர்.

Read Previous

நன்றி சென்னை, விடை பெற்றார் ஹர்பஜன் சிங்

Read Next

ஐபிஎல் 2021 – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் யார் ? யார் ?

Most Popular