விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். பல்வேறு முன்னணி இயக்குநர்கள் அவரை நடிகராக அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியும் மறுத்துவிட்டார். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
நீண்ட நாட்களாக ஜேசன் சஞ்சய் படத்தின் கதை விவாதம், திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. முதலில் பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தினை உருவாக்க இருந்தார்கள். ஆனால், பெரிய நாயகர்கள் யாரிடமும் தேதிகள் இல்லாததனால், படத்தின் பட்ஜெட்டை சுருக்கிவிட்டார்கள். அதற்கு தகுந்தாற் போல் கதையும் மாறியிருக்கிறது.
இந்தக் கதையினை சந்தீப் கிஷனை சந்தித்து கூறவே, அவரும் உடனே ஒ.கே சொல்லியிருக்கிறார். விரைவில் தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இதனை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.