ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘ஜெயிலர் 2’ வசூல் உலகளவில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் ரூ.549 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வார வசூலில் புதிய சாதனையை இந்தப் படம் புரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், அடுத்தகட்டமாக எவ்வளவு கோடி வரை போகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.