ஆதி சாய்குமார் நடிக்கும் ‘ஆதி ருத்ரா’

காந்தாரா படத்தைத் தொடர்ந்து, தெய்வீகம், ஆன்மிகம், மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படம் ‘ஆதி ருத்ரா’. ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை திரிசூல் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த் G ருத்ரப்பா தயாரிக்கிறார். நவரசன் எழுதி இயக்குகிறார்.

1960 முதல் 1990 வரையிலான காலகட்டத்தின் பின்னணியில், தெய்வீக மர்மங்கள், ஆன்மிகம், நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற B. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.

தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Read Previous

தேவிஸ்ரீபிரசாத்தின் ‘எல்லம்மா’ வெளியீட்டுத் தேதி