‘பலேகம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த வேணு யெல்தண்டி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படம், 2027 மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.
Tags: devi sri prasad yellamma