மெகா சூர்யா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.தயாகர் ராவ் தயாரிக்க, பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் வழங்க, ஜோதி கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘ஹரிஹர வீர மல்லு’.
தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. VFX, சவுண்ட் டிசைன் மற்றும் எடிட்டிங் பணிகளில், உலகத் தர சினிமா அனுபவத்தை வழங்கும் நோக்கத்தில், இப்படக்குழு முழுமையாக ஈடுபட்டு வருகிறது.
16ம் நூற்றாண்டு முகலாயக் கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படம், மண்ணின் வீரம் நிரம்பிய ஒரு சக்தி வாய்ந்த கதையை பதிவு செய்கிறது. பவன் கல்யாண் இந்தப் படத்தில் துணிச்சலும், புரட்சியும் நிறைந்த ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நிதி அகர்வால், பாபி தியோல், நாசர், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர்களான மனோஜ் பரமஹம்ஸா மற்றும் ஞானசேகர் V.S. ஆகியோர் படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளனர். தோட்ட தரணி வடிவமைத்துள்ள பிரம்மாண்டமான செட்கள், பார்வையாளர்களை வசீகரிக்கும் அளவிற்கு தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்படம் ஜுலை 24ம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.