ஹெச்.வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

ஹெச்.வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டிற்குள் படப்பிடிப்பு தொடங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு. 

இதனிடையே நேற்று (ஜூலை 3) சமூக வலைதளத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரித்த போது, ”‘துணிவு’ படம் முடிந்தவுடன் பல்வேறு நாயகர்களை சந்தித்து கதைகள் கூறி வந்தார் ஹெச்.வினோத். அதில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் அடங்கும். அனைத்துமே வெவ்வேறு கதைகள் என்பது தான் இதில் சுவாரசியம்.

இறுதியில் விஜய்க்காக பிரத்யேகமாக புதிய கதை ஒன்றிணை உருவாக்கி அதனை இயக்கவுள்ளார். விஜய் படத்தினை முடித்துவிட்டு தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயனிடம் பேசியது உண்மை தான். ஆனால், அந்தப் படம் எப்போது தொடங்கும், யார் தயாரிப்பாளர் உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாக வில்லை” என்று தெரிவித்தார்கள். 

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெவ்வேறு கதைகளை எழுதி வைத்திருந்தது, இப்போது ஹெச்.வினோத்திற்கு உபயோகமாக இருந்துள்ளது.

Read Previous

’சலார் 2’ Vs ‘டிராகன்’: தயாரிப்பாளர்களுக்குள் மறைமுக மோதல்

Read Next

யூ-டியூப் தளத்தில் முதல் இரண்டு இடங்களில் GOAT – இந்தியன் 2

Most Popular