‘காந்தி டாக்ஸ்’ டீசர் வெளியீடு

ஜீ ஸ்டுடியோஸ் வழங்க கியூரியஸ் டிஜிட்டல், பின்க்மூன் மீட்டா, மூவி மில் என்டர்டெயின் இணைந்து தயாரித்துள்ள படம் ‘காந்தி டாக்ஸ்’. 

கிஷோர் பாண்டுரங் பெலெகர் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதரி, சித்தார்த் ஜாதவ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் வசனங்கள், ஒலி இல்லாமல் மௌனப் படமாக உருவாகியுள்ளது.

கதையின் குரலாக, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் படத்தின் இசைதான் உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்த உள்ளது. 

ஜனவரி 30ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். 

Read Previous

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘புருஷன்’

Read Next

சமுத்திரக்கனி நடிக்கும் ‘தடயம்’ வெப் சீரிஸ்

Most Popular