பென்ஸ் மீடியா சார்பில் எசிஎஸ் அருண்குமார், அவ்னி சினிமோக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் இணைந்து தயாரிக்க, சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, யோகிபாபு நடிக்கும் படத்திற்கு ‘புருஷன்’ என தலைப்பு வைத்துள்ளார்கள்.
படத்தின் அறிமுக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விஷால், தமன்னா, யோகி பாபு நடித்துள்ள அந்த வீடியோ ஆக்ஷனும், காமெடியும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. படமும் அப்படித்தான் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.
‘ஆம்பள, ஆக்ஷன், மதகஜ ராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு நான்காவது முறையாக சுந்தர் சி, விஷால் கூட்டணி இப்படத்தில் இணைகிறது.
இப்படத்திற்கான திரைக்கதை வசனத்தை வெங்கட்ராகவன் எழுதுகிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. மற்ற நடிகர்கள், கலைஞர்கள் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.