ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ ஆரம்பம்

18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிப்பில், 'வத்திக்குச்சி' படத்தை இயக்கி கின்ஸ்லின் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘டிரைவர் ஜமுனா’.

பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான  எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

கிரைம்  த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கித் தந்துவிட்டாராம். ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி  டிரைவராக நடிக்கிறார்.

சென்னையில் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி பூஜை நடத்தி, படப்பிடிப்பை மும்முரமாக தொடங்கி நடத்தி வருகிறது படக்குழு.  

ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகள் அனல் அரசு, எடிட்டராக 'அசுரன்' எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

Read Previous

வெற்றிமாறனின் இலவச சினிமா பயிற்சி வகுப்புகள்

Read Next

பார்டர், எனக்கு சவாலான படம் – அருண் விஜய்

Most Popular