இயக்குநராகும் நடிகர் தீனா

’கைதி’ படத்தின் மூலம் பிரபலமான தீனா இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

‘கலக்க போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. அந்த நிகழ்ச்சியின் பிரபலத்தை வைத்து ‘ப.பாண்டி’ மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘உடன்பால்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களாகவே சின்னத்திரை மற்றும் படங்கள் என எதிலுமே தீனா தலைகாட்டவில்லை. என்னவென்று விசாரித்தால், புதிதாக கதையொன்றை எழுதி இயக்கி வருகிறார் தீனா. 

இந்தப் படத்தில் அவரே நாயகனாகவும் நடித்து வருவதாக தெரிகிறது.

மேலும், இந்தப் படத்தின் தயாரிப்பாளர், உடன் நடிக்கும் நடிகர்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் விரைவில் அறிவிக்கவுள்ளார்கள்.

Read Previous

தூக்குதுரை – விமர்சனம்

Read Next

மீண்டும் நடிகர் சங்க கட்டிடப் பணிகள் தொடக்கம்: நடப்பது என்ன?

Most Popular