அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமாண்டி காலனி 3’ திரைப்படம் 2026 கோடை வெளியீட்டை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் தயாரிக்கும் இந்தப் படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
முந்தைய இரண்டு பாகங்கள் வெற்றிபெற்ற நிலையில், மூன்றாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
புதிய ஆண்டை முன்னிட்டு, படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து இருவரும் இந்தப் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என தெரிவித்துள்ளனர்.
சுதன் சுந்தரம் கூறுகையில்,
‘டிமாண்டி காலனி 3’ படத்துடன் புது வருடம் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. கிரியேட்டிவ் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் அஜய் படத்தை மிகவும் நேர்த்தியாக எடுத்துள்ளார். தயாரிப்பாளராக எனக்கும் இது நம்பிக்கை அளித்தது. அருள்நிதியின் கமிட்மெண்ட்டும் அவரது உழைப்பும் இந்தப் படத்தின் மிகப்பெரிய நங்கூரம். இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திரங்கள் இன்னும் ஆழமாக இந்த மூன்றாம் பாகத்தில் இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்ப்பை மூன்றாவது பாகம் நிச்சயம் பூர்த்தி செய்யும்,” என்றார்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில்,
“புது வருடத்தில் ‘டிமாண்டி காலனி 3’ படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்து கொள்வது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். படத்திற்கு முழு ஆதரவு கொடுத்த சுதன் சாருக்கு நன்றி. கதையில் எந்தவிதமான தலையீடும் செய்யாமல் எங்களை சுதந்திரமாக பணிபுரிய வைத்தார். நடிகர் அருள்நிதிக்கும் நன்றி. முந்தைய படங்களை விட இதில் அருள்நிதியின் நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்றார்.