அதிக எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் 2026 மார்ச் 19 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதை முன்னிட்டு, படக்குழு அதன் இருண்ட, மர்மமான உலகத்தின் புதிய அத்தியாயமான நயன்தாராவின் ‘கங்கா’ கதாபாத்திரத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது.
அதிரடி, அழகு, ஆற்றலின் கலவையாக வெளிவந்த இந்த தோற்றம், யாஷின் கனவு படத்தில் நயன்தாரா ஒரு வலுவான கதாபாத்திரமாக இருப்பதை உறுதி செய்கிறது. கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ பின்னணியில் நிற்கும் இந்த தோற்றம், நயன்தாராவின் கேரக்டரின் அதிகாரம், துணிச்சல் மற்றும் மர்மத்தை வெளிப்படுத்துகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் இதுகுறித்து கூறியதாவது,
“நயன்தாரா ஒரு சிறந்த நட்சத்திரம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ‘டாக்ஸிக்’ படத்தில் அவர் இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் அந்தக் கதாபாத்திரமாகவே மாறியுள்ளார். அந்தத் தருணத்தில் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார்,” என்கிறார்.
‘டாக்ஸிக்’ படத்தில் யாஷுக்கு இணையாக கியாரா அத்வானி ‘நாடியா’ ஆகவும், ஹூமா குரேஷி ‘எலிசபெத்’ ஆகவும் நடித்துள்ளனர். இதற்கு முன்னர் வெளியான அவர்களின் முதல் பார்வை போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது.
சிறந்த தொழில்நுட்ப அணியுடன் உருவாகும் இந்தப் படத்தில், ராஜீவ் ரவி ஒளிப்பதிவை, ரவி பஸ்ரூர் இசையமைப்பை, உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கை மற்றும் டி.பி. அபித் கலை இயக்கத்தை மேற்கொள்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் ஜே.ஜே. பெரி (‘ஜான் விக்’ புகழ்) உடன் இணைந்து அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்டி அமைத்துள்ளனர்.
வேங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் இந்த பிரம்மாண்ட படம், ஈத், உகாதி, குடி பட்வா பண்டிகை வாரத்துடன் இணைந்து 2026 மார்ச் 19 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.