‘விஸ்வாசம்’ வசூல், ஓவர்டேக் செய்த ‘பிகில்’ ?

2019ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படமாக அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படம் இருந்தது. அந்தப் படம் சுமார் 180 கோடி வரை வசூல் செய்யததாக சொல்லப்பட்டது.

அந்த வசூலை விஜய் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த ‘பிகில்’ படம் 5 நாட்களில் முறியடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 90 கோடி, கர்நாடகாவில் 14 கோடி, கேரளாவில் 13 கோடி, வட இந்தியாவில் 4 கோடி, தெலுங்கு டப்பிங்கான ‘விசில்’ வசூல் 14 கோடி என இந்தியாவில் மட்டும் 135 கோடி, வெளிநாடுகளில் 65 கோடி என 200 கோடியைத் தாண்டிவிட்டதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வசூல் தகவலைப் பரப்பி வருகிறார்கள்.

ஆனால், இந்த வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பு நிறுவனமோ, வெளியிட்ட நிறுவனமோ இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதற்கு முன் விஜய் நடித்த ‘மெர்சல், சர்க்கார்’ ஆகிய படங்கள் 200 கோடி வசூலைக் கடந்த படங்கள் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் ‘பிகில்’ படமும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது என்கிறார்கள்.

Read Previous

ரஜினிகாந்த் வெளியிட்ட ‘அந்த நாள்’ முதல் பார்வை

Read Next

‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார்

Most Popular