‘அழகிய கண்ணே‘ படப்பிடிப்பு நிறைவு

எஸ்தல் எண்டர்டெய்னர் நிறுவனத்தின் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் திரைப்படம் ‘அழகிய கண்ணே'. 

இயக்குனர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குனர் ஆ R.விஜயகுமார் இப்படத்தை இயக்குகிறார்.

லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கிறார்கள். 

பல திருப்பங்கள் கொண்ட ஒரு இளைஞனின் காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், ஆன்ட்ரூஸ், அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  ‘காடன்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத்தமிழன் கவனிக்கிறார். சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Read Previous

தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ டிரைலர்

Read Next

எதற்கும் துணிந்தவன் – டிரைலர்