விஜய்க்காக எழுதிய கதையில் அல்லு அர்ஜுன்

‘ஜவான்’ வெற்றிக்குப் பிறகு, மீண்டும் தமிழ் படமொன்றை இயக்கத் திட்டமிட்டார் அட்லி. இதற்காக தீவிர கதை விவாத பணியில் ஈடுபட்டு வந்தார். 

‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய முடிவெடுத்தது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.ஆனால், படத்தின் கதையை முழுமையாக முடிக்க நேரமாகும் என்று கூறினார் அட்லி. 

இதற்கிடையில் ஒரு படத்தை முடித்துவிடலாம் என்று வெங்கட் பிரபு படத்தை தொடங்கினார் விஜய். தற்போது அட்லி கதையை முடித்து தயாராகிவிட்டார். என்ன பண்ணலாம் என்ற ஆலோசனையில் இறங்கினார்.

ஏற்கனவே அல்லு அர்ஜுன் பட வாய்ப்பு ஒன்று நம்மிடம் இருக்கிறது என்று அவரை சந்தித்து விஜய்க்காக தயார் செய்த கதையை தெரிவித்துள்ளார் அட்லி. அவரும் ஒ.கே சொல்லவே, இந்தக் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இந்தப் படத்தின் தயாரிப்பு மூலம் தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கவுள்ளது.

‘புஷ்பா 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்தவுடன், சன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் – அட்லி இணையும் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Read Previous

நந்திவர்மன் – விமர்சனம்

Read Next

ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகியுள்ள கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா