அசுரன் படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள படம் ‘அசுரன்’.

இப்படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.

படம் வெளியான நேற்று சென்னை புறநகர் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் காலை 8 மணிக்கு சிறப்பு காட்சிகள் நடைபெற்றன.

இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் காலை 8 மணி சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு படம் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் நடைபெற்றது.

ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோருக்கு மட்டும்தான் இப்படி கூடுதலாக சிறப்பு காட்சிகள் நடைபெறும். அவர்களது வரிசையில் தற்போது தனுஷும் இடம் பிடித்துள்ளார்.

கர்நாடகாவில் 90 தியேட்டர்களில் திரையிடப்பட்ட படத்திற்கு மேலும் 5 தியேட்டர்கள் சேர்க்கப்பட்டது .

திருநெல்வேலி, தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களிலும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read Previous

அசுரன் – விமர்சனம்

Read Next

விஜய் டிவி தொடர் – நாகலோகத்தின் கதை ‘தாழம்பூ’