முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் ஆரம்பம்

ஜீ ஸ்டூடியோஸ், டிரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

ஆர்யா நடிக்கும் 34வது படம் இது. கிராமத்துப் பின்னணியில் குடும்பத்துடன் ரசிக்கும்படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

ஜீ ஸ்டுடியோஸ் தென்னிந்தியத் தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் படம் பற்றிக் கூறுகையில், 

“ முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில்  ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன்  இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து  மாறுபட்ட பாத்திரங்களில்  வித்தியாசமான படங்கள் மூலம்  பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர்  முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித் துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. நாங்கள் அனைவரும் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான  அனுபவத்தைத் தரும், நல்ல படைப்பை வழங்குவோம்  என்று நம்புகிறோம்,” என்கிறார்.

Read Previous

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பிரின்ஸ்’ – டிரைலர்

Read Next

பிக் பாஸ் சீசன் 6 – போட்டியாளர்கள் பட்டியல்

Most Popular