தமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவராக இருப்பவர் அருண் விஜய்.
அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘மாஃபியா’ படமும் வெற்றிப் படமாக அமைந்தது.
தற்போது சில புதிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்களைக் கடந்துள்ள அருண் விஜய்யின் 31வது படத்தை அறிவழகன் இயக்கி வருகிறார்.
அறிவழகன், அருண் விஜய் கூட்டணி இணைந்து 2017ல் வெளிவந்த ‘குற்றம் 23’ வெற்றிப் படத்திற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணையும் படம் இது.
இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் 15 நாட்கள் நடைபெற உள்ளது.
சேசிங் காட்சிகள், சண்டைக் காட்சிகள் யமுனை நதிக்கரையிலும், ஆக்ரா, டெல்லியின் கூட்ட நெரிசல் மிகுந்த சந்தைகளிலும் மற்றும் பாடல் காட்சிகளும் அங்கு படமாக உள்ளன.
தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
ரெஜினா கசான்ட்ரா கதாநாயகியாக நடிக்க உள்ளார். மிஸ் டீன் இண்டர்நேஷனல் 2016 பட்டம் பெற்ற ஸ்டெஃபி படேல் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். பகவதி பெருமாள் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.