கோவில்பட்டியில் ஆரம்பமானது ‘அரசன்’ படப்பிடிப்பு

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிலம்பரசன் TR, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘அரசன்’. 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி இருக்கிறது. இந்த படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இருபது நாட்கள் வரை நடைபெறும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறனின் வட சென்னை யுனிவர்ஸாக  உருவாகும் இந்தத் திரைப்படத்தில் சிலம்பரசன் TR கதாநாயகனாகவும், விஜய் சேதுபதி முக்கிய வேடத்திலும் நடிக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

தேசிய விருதுகளை வென்ற திரைக் கலைஞர்களான சிலம்பரசன் TR-  இயக்குநர் வெற்றிமாறன்-  விஜய் சேதுபதி – கலைப்புலி எஸ் தாணு – சமுத்திரக்கனி – கிஷோர் – ஆகிய திறமைசாலிகள் கூட்டணி அமைத்து ‘அரசன் படம் ஆரம்பமாகி உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

Read Previous

சாந்தனு, அஞ்சலி நாயகர் நடிக்கும் ‘மெஜந்தா’

Read Next

மகாசேனா – விமர்சனம்