அமோக வரவேற்பை பெற்ற ‘ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2’ ஸ்னீக் பீக்

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின், பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் 'ஆண்டி பிகிலி- பிச்சைக்காரன்2' வெளிவரத் தயாராக இருக்கிறது. இயக்குநராக விஜய் ஆண்டனிக்கு இது முதல் படம். மேலும், படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இன்னும் 2 நாட்கள் பேட்ச்-அப் வேலைகள் உள்ளது. 

படத்தின் டீசர், டிரெய்லர் வருவதற்கு முன்பாகவே 4 நிமிட sneak peak வெளியிட்டிருக்கிறது படக்குழு. 

சமீபத்தில், வெளியான இந்த நான்கு நிமிட sneak peak பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

'ஆண்டி-பிகிலி' என்ற புரோமோஷனல் கான்செப்ட்டோடு ஆரம்பித்த இந்தப் படத்தின் அனைத்திந்திய சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் நெட்வொர்க் பெற்றுள்ளது. 

'ஆண்டி பிகிலி – பிச்சைக்காரன் 2' படத்தில் விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read Previous

இது பகாசூரன் அல்ல; பக்கா சூரன் – கே ராஜன்

Read Next

பெண்ணோடு பெண் சேரும் உணர்வைப் பேசும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’

Most Popular