ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்க R. ரகுநந்தன் கிரீன் மேஜிக் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அந்த நாள்.
இந்தப் படத்தில் ஆர்யன் ஷாம் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
கதை நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் புகழ் ராஜ்குமார், கைதி பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருக்கிறார்.
வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கான இறுதி க்கட்ட ப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரஜினிகாந்த் வெளியிட்டார். இரண்டாவது பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
Tags: antha naal aryan shaam