சென்னை திரைப்பட விழா – சிறந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னையில் நடந்த 18-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை ஐஸ்வர்யா ராஜேஷ் வென்றார்.

விருமாண்டி இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த ‘க/பெ ரணசிங்கம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் படத்தில் நடித்தற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. 

சிறந்தந டிகைகக்கான விருதுபெற்றது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில்,

"உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. 

க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த டீமிற்கு என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். 

நல்லநடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெரு நன்றியும்," என்றார்.
 

Read Previous

சென்னை திரைப்பட விழா – சிறந்த படமாக ‘என்றாவது ஒரு நாள்’ தேர்வு

Read Next

பிப்ரவரி 27ம் தேதியில் வெளியான படங்கள்…

Most Popular