‘குரங்கு பொம்மை’ இயக்குனரோடு கைகோர்த்த விஜய்சேதுபதி

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், தற்போது அதன் புதிய புராஜெக்ட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இதில் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.    

இதன் படப்பிடிப்பு இன்று  சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சில முன்னணி நடிகைகளிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. 

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் முழுக்க முழுக்க க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாக உள்ளது.

தொழில்நுட்பக் குழு விவரம்:

பி. அஜ்னீஷ் லோக்நாத் (‘காந்தாரா’ இசையமைப்பாளர்). இவர் நித்திலனின் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபிலோமின் ராஜ் (மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், தளபதி 67) இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர்.

’லவ் டுடே’ மற்றும் ‘விலங்கு’ இணையத்தொடர் ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். 

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். ‘சீதக்காதி’ மற்றும் ‘அனபெல் சேதுபதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்தப் படம் மூலம் விஜய்சேதுபதியுடன் இணைகின்றனர்.
 

Read Previous

படத்தில் எனக்கு ஜோடி உண்டு. ஆனால், அவர் இல்லை – ஆர் ஜே பாலாஜி!

Read Next

ஜாலியான ஃபீல் குட் படம் – “காதல் கண்டிசன்ஸ் அப்ளை” விழாவில் நிதின் சத்யா

Most Popular