கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படத்தின் தமிழ்ப்பதிப்பு வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தினை தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறது.
இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னையில் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் நடிகர் விஜய் ஆண்டனி கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இவ்விழாவில்…
தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது…
படத்தின் டிரெய்லர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிவாண்ணா, ராஜ் B. ஷெட்டி சூப்பராக நடித்துள்ளனர், உபேந்திரா கலக்கியுள்ளார். அர்ஜுன் ஜான்யா இப்படத்தை அற்புதமாக உருவாக்கியுள்ளார். படத்தைப் பற்றி என்னைவிட அவர்கள் தான் சொல்ல வேண்டும். இங்கு படத்தை வாழ்த்த வந்துள்ள விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது…
சிவாண்ணா அவர்களின் ரசிகன் நான். அவர் மிகப்பெரிய குடும்பத்திலிருந்து வந்தவர்; ஆனால் அதை வெளியில் எங்கும் காட்டிக்கொள்ள மாட்டார். அவர் பற்றி சமீபத்தில் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அவருக்கு கேன்சர் வந்தது. இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் எல்லோரும் உடைந்து விடுவோம், குடும்பத்தோடு இருக்க ஆசைப்படுவோம். ஆனால் சிவாண்ணா தயாரிப்பாளரை அழைத்து, இன்னும் மீதமுள்ள ஷூட்டிங்கை முடித்து விடுங்கள், டப்பிங் எடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அவரின் அர்ப்பணிப்பிற்கும் நேர்மைக்கும் தலை வணங்குகிறேன்.
இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா பேசியதாவது…
ஒரு இசையமைப்பாளராக இருந்து இயக்குநராக ஆனால் என்ன ஆகும் என புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி இங்கு வந்து வாழ்த்தியதற்கு என் நன்றி. டாக்டர் சிவராஜ்குமார் அண்ணா சொன்னதால் தான் நான் இன்று இப்படத்தை இயக்கினேன். நான் இயக்குநராக காரணம் அவர் தான். அவருக்கு என் நன்றி. இயக்குநர் சக்கரவர்த்தி உபேந்திரா அவர்களின் ரசிகன் நான். அவர் என்னை நம்பி கதை கேட்டு, இதில் ஒரு பாத்திரத்தில் அற்புதமாக நடித்துத் தந்தார்.
ராஜ் B. ஷெட்டி கர்நாடகாவின் பெருமை. அவர் இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி முழுமையாக நம்பி இப்படத்தைத் தாங்கியுள்ளார். அவருக்கு என் நன்றிகள். நான் ஒரு ரசிகனாகத்தான் இந்த மூன்று பேரையும் இயக்கியிருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். நன்றி.
நடிகர் வின்செண்ட் அசோகன் பேசியதாவது…
என் நீண்டகால நெருங்கிய நண்பன் சிவராஜ்குமார். அவருக்காகத்தான் நான் இந்த விழாவிற்கு வந்துள்ளேன். அவர் ரசிகன் நான். அவருடன் படம் நடித்துள்ளேன். ஒரு நண்பரை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் சிவராஜ்குமார் தான். என் அப்பா இறந்த போது அவர் படம் நடித்து பெரிய ஹீரோ; ஆனால் எனக்காக ஓடோடி வந்தார். அவர் மனதுக்கு நன்றி.
உபேந்திரா அவர்களின் படங்களுக்கு நான் ரசிகன். அர்ஜுன் ஜான்யா படத்தை மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் ராஜ் B. ஷெட்டி பேசியதாவது…
தமிழ் ரசிகர்களின் அன்புக்கு நன்றி. தமிழ் மக்கள் கலாச்சாரத்தில் சினிமா கலந்துள்ளது. அவர்கள் சினிமாவை கொண்டாடுகிறார்கள். சிவாண்ணாவை ஜெயிலர் படத்திலும், உபேந்திராவை கூலி படத்திலும் கொண்டாடினார்கள். நல்ல சினிமா இங்கு கொண்டாடப்படும். தமிழ் சினிமா கர்நாடகாவிலும் கொண்டாடப்படுகிறது.
நடிகர் உபேந்திரா பேசியதாவது…
நடிகர் சிவராஜ்குமார் பேசியதாவது…
நான் விஜய் ஆண்டனி ரசிகன். அவர் சினிமாவில் எல்லா வேலையும் செய்துள்ளார். அவரின் பிச்சைக்காரன் படத்தின் ரீமேக் வாய்ப்பு எனக்கு வந்தது; ஆனால் அதை மிஸ் செய்து விட்டேன். மீண்டும் அவரின் வேறு படத்தில் நடிக்கக் காத்திருக்கிறேன்.
தொழில்நுட்பக் குழு
கதை, இசை, இயக்கம் : அர்ஜுன் ஜான்யா
தயாரிப்பு : ஸ்ரீமதி உமா ரமேஷ் ரெட்டி, M. ரமேஷ் ரெட்டி
தயாரிப்பு நிறுவனம் : Suraj Production
ஒளிப்பதிவு : சத்யா ஹெக்டே
எடிட்டிங் : K. M. பிரகாஷ்
சண்டை இயக்கம் : டாக்டர் K. ரவிவர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்ரென்ட் டேனி, சேதன் டி’சௌசா
நடன இயக்கம் : சின்னி பிரகாஷ், B. தனஞ்சய்
வசனங்கள் : அனில் குமார்
தயாரிப்பு மேலாளர் : ரவிசங்கர்
தயாரிப்பு பொறுப்பாளர் : சுரேஷ் சிவண்ணா
கலை இயக்கம் : மோகன் பண்டித்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)