ஸ்டார் கிரிக்கெட் கணக்கு வெளியிடப்படும், விஷால் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கும் விழா நேற்று நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். தீபாவளிக்கு அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்க பொருளாளர் கார்த்தி , நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோரும் உறுதுணையாக இருந்தனர். நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார். இதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம். தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் விரைவாக குணமடைய நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம்,” என்று விஷால் பேசினார். இவ்விழாவில் மூத்த நடிகர் நடிகைகளான சரஸ்வதி , கமலா, மணி ஐயா , ஜெய்பாலையா , ஜெயராமன், டி.கே.எஸ். நடராஜன் மற்றும் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தீபாவளி பரிசை பெற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினர்களான நடிகர் ராஜ் கிரண் , இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் ஆகியோர் இதனை வழங்கினர். இவ்விழாவில் செயற்குழு உறுப்பினர்கள் குட்டி பத்மினி, ஸ்ரீமன், உதய, பசுபதி, விக்னேஷ், ராஜேஷ், ஜூனியர் பாலய்யா, அயூப்கான், பிரேம், தளபதி தினேஷ், T.P.கஜேந்திரன், சிவகாமி , பாலதண்டபாணி, எம்.ஈ.பிரகாஷ், நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதகுமாரி, மனோபாலா, ஹேமச்சந்திரன், அஜய்ரத்தினம், ஜெரால்டு , வேலூர் வாசுதேவன், மற்றும் நடிகைகள் ரோகினி ,நீலிமா ஆகியோர் கலந்துகொண்டனர்

Read Previous

‘பைரவா’ – அதிக விலைக்கு விற்கப்பட்ட யு.எஸ். உரிமை

Read Next

ஹோட்டல் கட்டப் போகிறார் த்ரிஷா ?