தமிழ் சினிமாவில் அறிமுக கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் ‘ஒளடதம்’ திரைப்படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் நேதாஜி பிரபு. மருத்துவ மாபியாக்களைப் பற்றிய அந்தப் படம் பெரும் கவனத்தை ஈர்த்தது. ‘ஒளடதம்’ வெளியான பிறகு, தனது அடுத்த படைப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் அவர்.
சிறிய இடைவெளிக்குப் பின்னர், தமிழ் திரையுலகில் மீண்டும் களமிறங்கும் வகையில், அற்புதமான ஒரு போட்டோ ஷூட்டை நிகழ்த்தியுள்ளார் நேதாஜி பிரபு.
தனது புதிய தோற்றத்திற்காக உடல் எடையை அதிகரித்து, உடலை வலுப்படுத்தி, சுமார் ஒரு வருடமாக தாடி வளர்த்து, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஷூட்டில், 8 வெவ்வேறு ஸ்டைல்களில் 8 தனித்துவமான லுக்குகளை வெளிப்படுத்தி, 15 மணி நேரங்களில் 30 உடைகளை மாற்றி, அசத்தலான படங்களை எடுத்துள்ளார்.
இத்தகைய தோற்ற மாற்றங்களின் வழியாக, 500-க்கும் மேற்பட்ட புகைப்படங்களைப் படம்பிடித்து, இதுவரை யாரும் முயற்சிக்காத அளவுக்கு இந்த ஷூட்டை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
இதன் மூலம், தமிழ் சினிமாவில் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்க ஆர்வத்துடன் களமிறங்கியுள்ளார் நேதாஜி பிரபு.
எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கும் தகுதியைப் பெற, உடல், மனம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு, அர்ப்பணிப்பு என அனைத்து அம்சங்களிலும் தன்னை முழுமையாகத் தயார்படுத்தியுள்ளார்.
சினிமா, தன்னை நோக்கி அன்புடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களை ஒருபோதும் கைவிடாது என்பதற்கு உதாரணமாக இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். சினிமாவை அலட்சியமாகவோ அல்லது சாதாரணமாகவோ பார்க்கக் கூடாது; தகுதியானவர்களை அது அரவணைத்துக் கொள்ளும் என்பதை இது நிரூபிக்கிறது. இதைப் பார்க்கும்போது, இதுவரை படை திரட்டி வந்தவர், இனி போர்க்களத்தில் இறங்கத் தயாராக இருக்கிறார் எனத் தோன்றுகிறது.
நேதாஜி பிரபுவின் இந்த தொடர்ச்சியான உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வெளிப்படும் இந்த அழகிய போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக இங்கே…
அனைத்து காட்சி ஊடகங்களிலும் தனது முகத்தைப் பதிய விருப்பமுடன் இருக்கும் நேதாஜி பிரபு, தனது பயணத்தைத் தொடர்கிறார்.