புதிய படத்தில் கவின், சாண்டி கூட்டணி

திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி இணைந்துள்ளார். 

இப்படத்தில் சாண்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை தெரிவிக்கும் வகையில், படக்குழு ஒரு போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான கவின் – சாண்டி கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கவினும் சாண்டியும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டருடன் வீடியோவும் வெளியாகி உள்ளது. 

இத்திரைப்படத்திற்கு ஓப்ரோ (OFRO) இசையமைக்கிறார். பேண்டஸி – ரொமான்டிக் – காமெடி படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

இப்படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

Read Previous

மரகத நாணயம் 2 – அறிமுக வீடியோ வெளியீடு

Read Next

நேதாஜி பிரபு : ஒரு போட்டோ ஷூட்டுக்காக ஓராண்டு அயராத உழைப்பு

Most Popular