தமிழனுக்குக் கொம்பு முளைத்து விட்டது – வைரமுத்து கவிதை
ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி வைரமுத்து நேற்று வெளியிட்டுள்ள கவிதை…. வாடிவாசல் திறந்துவிடும் வாழ்த்துகிறேன் தம்பி – இனி கோடிவாசல் திறக்கும்உன் கொள்கைகளை நம்பி தலைவர்களே இல்லாத கட்சியொன்று காட்டி – ஒரு தலைமுறைக்கே வழிசொன்னீர் தமிழினத்தைக் கூட்டி அடையாளம் தொன்மங்கள் அழிக்குமொரு கூட்டம் – உங்கள் படையாழம் பார்த்தவுடன்…