2 டி என்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரிக்க பிரம்மா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.
ஜோதிகா, பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா, நாசர், லிவிங்ஸ்டன், பாவல் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வரும் இரண்டாவது படம் இது.
‘36 வயதினிலே’ படத்திற்குப் பிறகு ஜோதிகா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.
விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.