ராகவா லாரன்ஸுக்கு விஜய் பாராட்டு

ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘காஞ்சனா 2’.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸின் தோற்றத்தைக் கண்டு ஏற்கெனவே ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

தற்போது நடிகர் விஜய், ராகவா லாரன்ஸை அவருடைய வீட்டிற்கே அழைத்து பாராட்டியுள்ளார்.

‘காஞ்சனா 2’ படம் வெற்றி பெற்றதற்கு ராகவாவிற்கு விஜய் வாழ்த்துகளைக் கூறினார். அந்த வாழ்த்தால் மிகவும் நெகிழ்ச்சியடைந்துள்ளள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

‘காஞ்சனா 2’ படத்திற்கு சிறுவர், சிறுமியரிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

Natpadhigaram 79 – Official Trailer

Read Next

Kangaroo – Thayum Konja Kalam… – Song Video