நான் ‘ஐட்டம் கேர்ள்’ நடிகையில்லை – சஞ்சனா சிங்

சஞ்சனா சிங் யாரென்று தெரியாமல் சினிமா ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். ‘ரேணிகுண்டா’ படம் பார்த்தவர்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ தெரியாது, அவருடைய புகைப்படத்தைப் பார்த்தால் ஓ இவர்தான் சஞ்சனா சிங், என்று கண்டிப்பாகச் சொல்லி விடுவார்கள்.

அறிமுகப் படத்திற்குப் பிறகு இன்னும் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை எப்போதும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்.

அப்படித்தான் நேற்றும் ‘தோடா லுத்ஃப் தோடா இஷ்க்’ என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமானதற்காக பத்திரிகையாளர்களை அந்தப் படக்குழுவினருடன் சந்தித்தார்.

‘ஹிந்தியில் அந்தப் படத்தில் நான் ஒரு ஐட்டம் பாடலுக்குத்தான் நடனமாடியிருக்கிறேன். ஆனால், அங்கெல்லாம் ஒரு நடிகையை தனித் தனியாகப் பிரித்துப் பார்க்க மாட்டார்கள். இங்குதான் ஐட்டம் கேர்ள் நடிகை, ஹீரோயின், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் எனப் பிரிக்கிறார்கள். என்னை இனிமேல் ஐட்டம் கேர்ள் நடிகை என்று அழைக்காதீர்கள்.

ஹிந்திப் படத்தில் நான் ஆடிய பாடலுக்கு அமோகமான வரவேற்பு உள்ளது. பல தொலைக்காட்சிகளில் பாடலை ரிபீட்டாகப் போட்டு வருகிறார்கள். நகைச்சுவை கலந்த இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார் சஞ்சனா சிங்.

Read Previous

Sivakarthikeyan’s new movie launched in stlye…

Read Next

Nagarjuna, Karthi, Tamanna bound for Europe…