தணிக்கைக் குழு பாராட்டில் ‘பாகுபலி’…

இந்திய திரைப்பட வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படம், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ‘பாகுபலி’.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் ஜுலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை சமீபத்தில் தணிக்கை செய்த தணிக்கைக் குழுவினர், ‘பாகுபலி’ படத்தின் பிரம்மாண்டத்தையும், மிரள வைக்கும் காட்சியமைப்பையும் பார்த்து வியந்தார்களாம்.

சிறப்பம்சமிக்க ‘பாகுபலி’ படத்தை தணிக்கை செய்ததற்கு மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், ‘பாகுபலி’ பட தணிக்கைச் சான்றிதழில் தங்களின் பெயர் இடம் பெறுவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளனராம்.

பல வெற்றிப் படங்களைத் தந்த கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமையும் என்றும் வாழ்த்தியுள்ளார்கள்.

பொதுவாகவே எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருநத ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு, தணிக்கைச் சான்றிதழ் குழுவினர் அளித்த பாராட்டு அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Read Previous

Baahubali – Shivudu Character – Making Video

Read Next

பரஞ்சோதி – விமர்சனம்