சாதிப் பிரச்சனைதான் ‘பாகுபலி’ கதையா ?

ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சரித்திரப் படமான ‘பாகுபலி’ படத்தின் கதை சாதிப் பிரச்சனைகளை மையப்படுத்திய கதை என தெலுங்குத் திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

15வது நூற்றாண்டில் ‘மகிஷ்மதி’ பேரரசில் ஆட்சி புரிந்து வந்த உயர்ந்த சாதிக் காரர்கள், தாழ்ந்த சாதிக்காரர்கள் மீது திணித்த அடக்குமுறை ஆட்சியைப் பற்றிய கதையாகத்தான் ‘பாகுபலி’  படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

மகிஷ்மதி பேரரசை விட்டு விலகி வெகுதூரத்தில் மலைப் பிரதேசம் ஒன்றில் வாழ்ந்து வரும் பிரபாஸ், அவருடைய பிறப்பைப் பற்றியும், பெற்றவர்களைப் பற்றியும், தன்னுடைய அடையாளத்தைத் தேடி மகிஷ்மதிக்கு வருவதுதான் சரித்திரக் காலக் கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

பல போர்களுக்கு ஏற்றத் தாழ்வுகள்தான் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை விளக்கும் படமாகவும் ‘பாகுபலி’ இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்தப் படத்தில் போர் காட்சிகள் படத்தில் அதிகம் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் வேண்டுமானால் மோதல் காட்சிகள் இருக்கட்டும், ஆனால், படம் வந்த பிறகு எந்த மோதலும் ஏற்படாமல் இருந்தால் சரி.

Read Previous

‘கே.பாலசந்தர் திரை விருது’ பெறும் முதல் இயக்குனர் மணிகண்டன்

Read Next

கல்லூரி மாணவர்கள் உருவாக்கத்தில் ‘மய்யம்’…