வீரா – ரஜினி படத் தலைப்பில் மீண்டும் ஒரு படம்

தமிழ்த் திரையுலகில் அனைவருக்குமே ரஜினிகாந்த் ஆகி விட வேண்டும் என்ற ஆசை பேராசையாக உள்ளது.

அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ யார் என்ற சர்ச்சை கூட அடிக்கடி முளைத்து பின்னர் அடங்கி விடும். ரஜினியாகத்தான் ஆக முடியவில்லை, ரஜினி பட தலைப்பை மீண்டும் வைத்தாவது ஆசையை தீர்த்துக் கொள்வோம் என சிலர் நினைக்கிறார்கள்.

அந்த வரிசையில் இப்போது ரஜினிகாந்த், மீனா, ரோஜா நடித்து இளையராஜாவின் இனிமையான பாடல்களால் சூப்பர் ஹிட்டாக ஓடிய ‘வீரா’ படத்தின் தலைப்பில் புதிய படம் ஒன்றை இன்று அறிவித்துள்ளனர்.

பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா மேனன், பாலசரவணன் மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் ராஜாராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Read Previous

சண்டி வீரன் – ஓர் அறிமுகம்

Read Next

நீ……ண்ட ‘வாலு’ அதி விரைவில் வருகிறது…