விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள ‘வாலு’ படம் கடந்த மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று அதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.
ஆனால், வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன் மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் படத்தின் வெளியீட்டிற்கு தடை கேட்டு வழக்குத் தொடர்ந்தது. அதையடுத்து பட வெளியீட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர் ‘வாலு’ படத்தை வெளிவராமல் தடுக்க சிலர் சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
அதன் பின் சம்பந்தப்பட்டவர்கள் பேசி பிரச்சனையை ஒரு சுமூகமான முடிவுக்குள் கொண்டு வர முடிவு செய்தனர். அதற்கு நடிகர் விஜய் மிகப் பெரும் உதவி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்குத் தொடர்ந்த நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. இதன் காரணமாக ‘வாலு’ திரைப்படம் அதி விரைவில் வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
சிம்புவின் நீ………ண்ட காத்திருப்பிற்கு இனி மேல்தான் விடிவு கிடைக்கப் போகிறது.