ஷங்கரைக் கிண்டலடிக்கும் மகேஷ் பாபு பட வசனம்

மகேஷ் பாபு, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர்  நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கில் ‘ஸ்ரீமந்துடு’ என்ற பெயரில் வெயிான படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்ற பெயரிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

கமல்ஹாசன் நடித்துள்ள ‘உன்னால் முடியும் தம்பி’, விஜய் நடித்துள்ள ‘கத்தி’ ஆகிய இரண்டு படங்களையும் கலந்து ஒரு கதையை உருவாக்கி ‘செல்வந்தன்’ படமாக வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் இயக்குனர் ஷங்கரைக் கிண்டலடிக்கும் விதத்தில் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. பல்லாயிரம் கோடிக்கு வாரிசான பணக்கார நாயகன் மகேஷ் பாபு, அவர்களது சொந்த கிராமத்தை தத்து எடுத்து மாற்றுகிறார்.

அதை எதிர்க்கும் வில்லனிடம் மகேஷ் பாபு பேசுவதாக ஷங்கரைக் கிண்டலடிக்கும் விதத்தில் “பணக்காரப் பையன்னா கையில பணமிருந்தா ஷங்கர் படம் மாதிரி பாறைக்கு பெயின்ட் அடிப்பன்னு பார்த்தியா” என வசனத்தை எழுதியுள்ளனர்.

பிரம்மாண்டம் என்பதை தென்னிந்தியத் திரையுலகில் காட்டிய ஷங்கரை சமீப காலமாகத் தெலுங்குத் திரையுலகினர் மிகவும் கிண்டலடித்து வருகின்றனர். அதை மகேஷ் பாபு போன்ற நடிகரும் அவரது படத்தில் வசனமாக வைத்திருப்பது தமிழ் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

விஜய் டிவி சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

Read Next

நான் விஜய் ரசிகன் – டி.ராஜேந்தர்