‘யட்சன்’ – செப்டம்பர் 11 ரிலீஸ்…

யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னிதி, சுவாதி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘யட்சன்’.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ஐந்தாவது படமாகவும், அண்ணன் விஷ்ணு இயக்கத்தில் தம்பி கிருஷ்ணா நடிக்கும் முதல் படமாகவும் ‘யட்சன்’ அமைந்துள்ளது.

ஆர்யா நடிப்பில் இந்த ஆண்டில் வெளிவரும் மூன்றாவது படம் ‘யட்சன்’. இதற்கு முன் ஆர்யா நடித்துள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன.

ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக ‘யட்சன்’ உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளதாக யு டிவி தனஞ்செயன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Read Previous

Puli trailer from 20th August

Read Next

‘ரியல் ஹீரோ’வைச் சந்தித்த ‘ரீல் ஹீரோ’ விஷால்