த்ரிஷா நடிக்கும் ‘நாயகி’

த்ரிஷா தன்னுடைய அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். திருமண நிச்சயப் பிரச்சனைகளிலிருந்து முழுவதுமாக விடுபட்டு, திரையுலகத்தில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

தற்போது கமல்ஹாசனுடன் ‘தூங்காவனம்’, சுந்தர் .சி இயக்கத்தில் ‘அரண்மனை 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து ‘போகி, நாயகி’ ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

அதில் ‘நாயகி’ படம் வரும் 20ம் தேதி சென்னையில் பூஜையுடன் ஆரம்பமாக உள்ளது. கோவி இயக்கத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சத்யம் ராஜேஷ், ஜெயப்பிரகாஷ், பிரம்மானந்தம், மனோபாலா, கோவை சரளா ஆகியோர் நடிக்க உள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது.

Read Previous

Kabali – Does the title satisfy Rajini fans ?

Read Next

‘கபாலி’ – ரஜினியின் மகளாக தன்ஷிகா

Most Popular